எக்ஸ்பிரஸ் அவென்யுவில் ஜூலை முதல் தேதி(01/07/2013) நடந்த தற்கொலை சம்பவத்தை மிக அழகாக தொகுத்து, உண்மையை வெளிச்சம் போட்டு காட்டியுள்ளது இந்த யு டுயு ப் வீடியோ.
நான்கு மணிநேர சம்பவத்தை அரை மணி நேரத்தில் மிக நேர்த்தியாக தொகுத்திருக்கிறார்.
"இந்தியன் எக்ஸ்பிரஸ்" குழுமத்தின் அங்கமாக எக்ஸ்பிரஸ் அவென்யு இருப்பதாலோ என்னவோ இதை எந்த ஊடகங்களும் கண்டு கொண்டதாக தெரியவில்லை.
இதில் சத்யம் டிவியின் செய்தி முழு பூசனிக்காயைய் சோற்றில் புதைப்பதாக உள்ளது. சத்யம் டிவி செய்தி பார்க்க https://www.youtube.com/watch?v=eEXDo_Y4NkU
பக்க சார்பில்லாத தொலை தொடர்பு செய்தி நிறுவனங்களே இல்லை என்றாகிவிட்டது.
முன்பு கவர் வாங்கிகொண்டு புதுமுக நடிகர்களை ஆஹா ஓஹோ புகழ்ந்து எழுதுவதும் கவர் இல்லை என்றால் மட்டம் தட்டி எழுதுவதும் வாடிக்கையாய் இருந்தது. தற்போது அது சமுக வலைதளங்களுக்கும் விரிவடைந்து இன்னும் சுருங்க சொன்னால் தனிநபர் வலைதளங்களுக்கும் நீண்டு விட்டது.
(இங்கு நடிகர்கள் என்பதை நீக்கிவிட்டு இயக்குனர்,அரசியல்வாதி,தொழிலதிபர்,திரைப்படம்,சாதி,மதம்,...இத்யாதி இத்யாதி என்று எதை வேண்டுமானாலும் சேர்த்துகொள்ளலாம்)
"பிரபல" பதிவர்களுக்கு யாரவது கவர் கொடுத்தால் தான் எழுதுவார்கள்.