Followers
May 24, 2013
May 17, 2013
அழகு!
அத்தை மகலேன்று
அனுதாபம் கொள்ளவில்லை
உன்னை
அழகில்லாதவள் என்ற
தாழ்வுணர்சசி வாட்டுகிறதென்று
அறவணைக்க துடிக்கவில்லை .
இது
உன்னைப்பற்றி
என்
உள்ள உணர்வுகள் பற்றியும்
சில வரிகள் !
மிதமான மழைத்தூறலில் வந்து
வர்ணஜாலம் காட்டும்
வானவில்லைப்போல்
அழகும் ,
சற்று நேரத்தில் கலைத்து போகும் !
நரையும்
நடை தளர்வும்,
கன்னத்தின் சுருக்கமும்,
வரும்
கரு வளையத்தையும்
யாரால் தடுத்திட முடியும் !?
முதுமையில் பறிபோகும்
அழகை மட்டும் நேசிப்பவனுக்கு
சந்தோஷம்
மனைவியால் நிரந்தரமில்லை.
ஒரு பெண்ணின்
பரிசுத்தமான பாசமும்
பரிவும் அக்கறையுமே வாழ்க்கையை
அழகுபட ......
அலங்கரித்து செல்லும் !
புரிந்துக்கொள்
புற அழகை
புறம் தள்ளும்
நேர்மையான நேசத்திற்கு
இன்னொரு பெயர் காதல் !
என்
மின் மடலைக்கண்ட போது
என்னவளுக்கு
கொஞ்சமாவது தகர்ந்திருக்கும்
அழகில்லாதவள் என்ற
தாழ்வுணர்ச்சி !
Oct 17, 2012
ஓ....ப்பா கங்ணம் ஸ்டைல்...
கங்காரு குதித்து ஓடுவது மாதரியான இந்த நடனம் குழந்தைகள் மத்தியில் மிக பிரபலம். இந்த பாடலை பாருங்க ....
கண்டிப்பா நீங்களும் ஒருமுறையாவது ஆடி பார்பிங்க
கண்டிப்பா நீங்களும் ஒருமுறையாவது ஆடி பார்பிங்க
Oct 24, 2011
நம்பிக்கை
உயிர் கொடுத்து விரல் பற்றி
நடை பழக்கி நீதியை போதித்த
தந்தையின் மரணத்தின்
துயரத்தில் நானும்
துவண்டுப் போயிருக்கலாம் !
உதிரத்தில் உருவம் கொடுத்து
வளர்ச்சிக்கு பாலுட்டி
தாலாட்டில் தமிழ் புகட்டி ...
வாழ்ந்திட வழி காட்டிய ...
அன்னையின் இறுதியுடன்
நானும் இறுகி போயிருக்கலாம் !
மகிழ்ச்சி ,வீதியிலும் விளையாட்டிலும்
உண்டென்று
அழைத்து வந்த நண்பன்
கவன பிழையில்
விபத்தில் சிதறியதும்
நானும் நொருங்கி போயிருக்கலாம் !
சுருட்டி சென்ற சுனாமி
சிதைத்துப் போட்ட சூறைக்காற்று
பூமியை புரட்டி போட்ட பூகம்பம்
நாளைய உணவை
கேள்வியாக்கிய வெள்ளத்துடன்
என் துடிதுடிக்கும் இதயமும்
நின்று போயிருக்கலாம் !
உறவின் பிரிவிலும்
துன்பத் துயரிலும்
மரணங்கள் உறுதியென
உணர்ந்த பின்பும்
நாளைய பொழுதிலாவது
நன்மைகள் கிட்டாதா...!?
என்ற எதிர்பார்ப்புடன்
இன்றிரவு தூங்கப்போகின்றேனே
இதைதான்
நம்பிக்கை என்பதோ ?
16-01-2011 சிங்கப்பூர் தமிழ் முரசுவில் இடம்பெற்ற எனது ஆக்கம்
Oct 15, 2011
குட்டி இந்தியா (சிங்கப்பூர் தே...க்கா)
தேசம் விட்டு
தேசம் வந்து பொருள்தேடும் எனது
தேச நண்பர்களின் சொர்க்கபூமி!
தேச நண்பர்களின் சொர்க்கபூமி!
தேகமும் மனமும்
ரணமாகிபோனதை
நண்பர்களின் நேச தழுவலில்
மறந்திட செய்யும்
மகத்தான இடம்!
தமிழக கிராமங்கள்
தொலைத்த தாவணி...
தொலைத்த தாவணி...
எங்கும் அரிதாகிப்போன
மூங்கில் குழாய் புட்டு...
மூங்கில் குழாய் புட்டு...
விடுதியில் கண்ட
கோபால் பல் பொடி...
வீக்கத்தை தணிக்கும்
தென்னமரகுடி எண்ணையும்
தாராளமாய் கிடைக்கும்
தமிழக சந்தை!
கோபால் பல் பொடி...
வீக்கத்தை தணிக்கும்
தென்னமரகுடி எண்ணையும்
தாராளமாய் கிடைக்கும்
தமிழக சந்தை!
மகிழ்ச்சி துக்கம்
விரோதம் விசாரிப்பு
கொடுக்கல் வாங்கல்
குதூகலம் குடும்பசண்டை
ஊழியர்கள் மத்தியில்
ஞாயிறு தோறும்
கதம்பமாய் கொட்டிக்கிடக்கும்
அதிசய நந்தவனம்!
Sep 22, 2011
நிலையன நினைத்தே!
கருவில்
உயிர் பெற்றதும்
உறுதியாகிவிட்டது
மரணமும் !
முதிர்ந்தோ ...
முதிராமலோ ,
முடிந்து போய்விடும்
வாழ்க்கை !
நாம்
விரும்பினாலும்
விரும்பாவிடிலும்
விட்டு வைக்கப்போவதில்லை
முதுமை !
உயிரும் நட்பும்
எப்படி பிரியும்
எப்போது பிரியும்
எழுதி வைத்திட முடியவில்லை
எவருக்கும் !
பிறப்பும் இறப்பும்
எவரும்மரியாமலே ...
எவ்வித பிழையும் மின்றி
சரியாகவே வகுத்திருக்கிறது
இயற்கை !
ஆனாலும் நாம் ....
நிலையற்றதை
நிலையன நினைத்தே
நித்தமும்
தொலைத்து விட்டோம்
அமைதியை !
Sep 16, 2011
இந்திய அளவில் பிரபலமான நடிகர்கள் பட்டியலில் விஜய் முதலிடம்...
கவிதையின் முழக்கம்
பாரதியார் விழாவை முன்னிட்டு நண்பரின் இரண்டரை வயது விஜயதர்ஷினியின் தமிழ்ரசம்
-------------------------------------------------------------------------------------------------
முடிஞ்சா சிரிங்க ...
''அம்மா இரண்டாயிரத்து ஒன்றில் முதல்வரானதுக்கும் இரண்டாயிரத்து பதினொன்றில் முதல்வரானத்திற்கும் நிறைய மாற்றம் இருக்கு!''
''ஆமாம் ஆமாம் ......அப்ப திமுக தலைவர மட்டும்தான் உள்ள பிடிச்சு போட்டாங்க. இப்ப , தி மு க தலைவர தவிர மற்ற எல்லாரையும் பிடிச்சி போடுறாங்க ''....
------------------------------------------------------------------------------------------------
"வந்தான் வென்றான்"
படத்தில் இடம்பெற்ற ஒரு பாடலின் வரிகள் இது
"சேற்றிலே நீ விழுந்தாலும்
தாமரை மாலைகள் மாட்டிடு
நேற்று நீ போர் இழந்தாலும்
நாளை உன் நாளெனக் காட்டிடு"
முழுப்பாடலையும் lyrics engineer-ன் பக்கத்தில் பார்க்கவும்.
-------------------------------------------------------------------------------------------------
நீரிழிவு நோய் என்றும், சர்க்கரை வியாதி என்றும் அறியப்படும் டயபடீஸ்,இந்தியா சந்திக்கும் மிகப்பெரும் சுகாதார நெருக்கடி என்று BBC சொல்கிறது. மேலும் அறிந்து கொள்ள தலைப்பை அழுத்துங்கள்
-------------------------------------------------------------------------------------------------------------------------
அப்புறம் தலைப்புக்கான செய்தி :-
இந்திய அளவில் பிரபலமான நடிகர்கள் பட்டியலில் விஜய் முதலிடமும் அஜித் இரண்டாமிடமும் பெற்றுள்ளனர் . உலக அளவில் விஜய் நான்காமிடமும் அஜீத் ஐய்ந்தாமிடமும் பெற்றுள்ளதாக whopopular என்ற இந்த வலைத்தளம் சொல்கிறது.மேலும் பிரபலமானவர்கள் பற்றி தெரிந்து கொள்ள இந்த பக்கத்திற்கு செல்லுங்கள் .
Labels:
அரசியல்,
ஏரிக்கரை கொசுறு,
பொது
Subscribe to:
Posts (Atom)




