Followers

Aug 28, 2011

தமிழகம் முதலிடம் ....                      உலகிலேயே சாலை விபத்துகளில் முதலிடம் வகிப்பது இந்தியாதான் . இந்தியாவில் நிகழும் விபத்துக்களில் பத்து சதவிகிதம் தமிழகத்தில் நடப்பது அதிர்சிகரமான சோகம் ! 


          2009 ம் ஆண்டில் இந்தியாவில் நடந்த நான்கு லட்சத்து இருபதாயிரம் சாலை விபத்துகளில் அறுபதாயிரத்து எழுநூற்று தொன்னூற்று நான்கு விபத்துக்கள் தமிழகத்தில் மட்டும் நடந்துள்ளதாக பதிவு செய்யப்பட்டுள்ளது .


               ஆசியாவில் , ஒரே சாலை விபத்தில் அதிக உயிர்களை பலிக்கொடுத்த அவலமும் தமிழகத்தில் நடந்துள்ளது. முன்பு "ஜெ" ஆட்சியின் போது, சென்னையிலிருந்து பெங்களூர் சென்றுக்கொண்டிருந்த  ஜெ ஜெ போக்குவரத்து கழக பேருந்தும், ஸ்ப்ரிட் ஏற்றி வந்த டேங்கர் லாரியும் , N H சாலையில் சுன்குவாசத்திரம் அருகே மோதிக்கொண்ட விபத்தின் போது திருமண கோஷ்டியை ஏற்றி வந்த டிராக்டரும் சேர்ந்து எரிந்ததில் 127 உயிர்கள் கரிக்கட்டையாகினர்  .

                   
               இந்த விபத்தின் கருகிய வாடை காற்றில் கலந்து மறைவதற்குள் , கோவை சூலூர் ஏர்போர்ட் அருகில் அரசு பேருந்தும் துவரம் பருப்பு ஏற்றி வந்த லாரியும் மோதி எரிந்ததில் பல உயிர்கள் பலியாகின  ,  அன்றே இந்த இரு விபத்துகளும் சாலை பயணத்தின் பாதுகாப்பு தன்மையை கேள்வி குறியாக்கியது .  


                அதன் பின் , சாலை விபத்துக்களை கட்டுபடுத்த அரசு பல புதிய  திட்டங்களைகொண்டுவரும் என்று எதிர்ப்பார்த்த மக்களுக்கு இன்றுவரை ஏமாற்றமே ! தமிழகம்   கடந்த ஆண்டு மட்டும் 13.700 உயிர்களை சாலைவிபத்தில் பலிக்கொடுத்திருக்கிறது . இது கடந்த பத்து ஆண்டுடன் ஒப்பிடுகையில் இரு மடங்கு அதிகமாம் ! 


                    அமைச்சர் மரியம் பிச்சை மரணத்திற்கு காரணமான வாகனத்தை அடையாளம் காணவே , தமிழக போலிஸ் பத்து தினங்கள் படாதபாடு பட்டுபோனதிலையே தெரிந்துபோனது அரசு  சாலையை கண்காணித்துவரும் லட்சணம் ! அதன்பின்னும் நிகழ்ந்த KBN பஸ் விபத்து முதல் தஞ்சை கீழ திருப்பந்துரித்தி வேன் விபத்து வரை பார்க்கும் போதும் சரி, இன்னும் போக்குவரத்து போலீசார் விழித்துகொண்டதாக தெரியவில்லை.


 ஆறரை கோடிமக்கள் இருந்த தமிழ்நாட்டில் அண்மைய கணக்கெடுப்பின்படி ஏழு கோடியே இருபது லட்சம் பேர் இருப்பதால்!? ... மக்கள் தொகையை கட்டுபடுத்தும் நோக்கில் அரசும் சாலை விபத்துகளை கண்டும் காணாமல் இருக்கின்றதோ ?

Aug 27, 2011

போலி குறுங்செய்திகள்

                 சில எஸ் எம் எஸ் வதந்திகளை பார்க்கும் போது ,மனித இதயங்கள் இற்று போய்விட்டதோ என்று எண்ணத்தோன்றுகிறது ! முன்னாள் தமிழக முதல்வர் கலைஞர் ஆட்சியில் இருந்த ஐந்தாண்டுகளில், அவர் இறந்துவிட்டதாக நான்கு முறை எஸ் எம் எஸ் வதந்தி பரவி ... தமிழகம் கடந்தும் பதட்டத்தை விதைத்திருக்கிறது ! 

              கடந்த சட்டமன்ற தேர்தலின்போது , தி மு க செய்த ஊழல் மற்றும் கலைஞர் குடும்ப ஆதிக்கத்தை பற்றிகேலியும் கிண்டலுமாய்  உலாவிய எஸ் எம் எஸ் சை படிக்காதவர்களே இல்லைஎன்று சொல்லலாம் .

                    கடந்த ஆட்சியில் , போலியோ சொட்டு மருந்து கொடுத்த ஒருநாள் , மூளை காய்ச்சல் நோயால் ஒரு குழந்தை இறந்துபோக ....'' இன்று போலியோ சொட்டு மருந்து சாப்பிட்ட குழந்தைகள் , தமிழகமெங்கும் கொத்து கொத்தாய் செத்து மடிகின்றன ''     என்ற கொடுரமான செய்தி எஸ் எம் எஸ் வழி பரவ .... சிங்கப்பூர் மலேசியாவில் இருக்கும் நம்மவர்களும் துடிதுடித்து போனார்கள் . அன்று சிங்கப்பூரில் விடுமுறை நாள் என்றதால் , லிட்டில் இந்தியா பகுதியில் கூடிய இந்திய ஊழியர்கள் தமிழக நிலைமையை சரிவர தெரிந்துகொள்ள  முடியாமல் , பைத்திய காரர்களைப்போல் ரோடுகளில் அலைந்தார்கள் . அப்போது  சிங்கப்பூர் தமிழ் வானொலி ஒலி96.8 தமிழக நிலவரத்தை திரு மாலனிடம் பேட்டிகண்டு ஒலிபரப்பி நம் ஊழியர்களின் பதட்டத்தை தனித்தது !

                  சிலநாட்களுக்கு முன் அப்துல் கலாம் கோவை மருத்துவமனை ஒன்றில் இறந்துவிட்டதாக எஸ் எம் எஸ் செய்தி பரவியது . 

           சட்டமன்ற தேர்தல் முடிவுகள் வெளி வந்துக்கொண்டிருந்த வேளையில் , ரஜினி இறந்துவிட்டதாக பரவிய எஸ் எம் எஸ் செய்திதான் , ரஜினியின் உடல் நலம் பற்றி லதா ரஜினிக்காந்தை வாய்திக்க வைத்தது .

            கந்த 24 ம் தேதி சிங்கப்பூரில் பரவிய ஒரு செய்திதான் எஸ் எம் எஸ் வதந்திகளை பரப்புவோருக்கு இதயம் இருக்கின்றதா என்ற கேள்வியை எழுப்புகின்றன   .
       அந்த எஸ் எம் எஸ் "ஆர்கே ஆர் ஸ்கூல் பஸ் ஆக்சிடென்ட் . கோவில்பட்டி பை பாஸ் ரோடு .30 l k g குழந்தைகள் சீரீஸ் பிளிஸ் பிரே பண்ணுங்கள்'' என்ற வாசகம் தாங்கிய எஸ் எம் எஸ் சிங்கப்பூரில் பரவியது ... 

             இது போன்ற கப்சா எஸ் எம் எஸ் சை யார் எழுதுவது ?