Followers

Sep 22, 2011

நிலையன நினைத்தே!


                                   படதுக்கும் கவிதைக்கும் சம்பந்தமில்லைங்க                           ருவில் 
                            உயிர் பெற்றதும் 
                            உறுதியாகிவிட்டது 
                            மரணமும் !


                            முதிர்ந்தோ ...
                            முதிராமலோ ,
                            முடிந்து போய்விடும் 
                             வாழ்க்கை !


                             நாம் 
                             விரும்பினாலும் 
                             விரும்பாவிடிலும் 
                             விட்டு வைக்கப்போவதில்லை 
                             முதுமை !


                             உயிரும் நட்பும் 
                             எப்படி பிரியும் 
                             எப்போது பிரியும் 
                             எழுதி வைத்திட முடியவில்லை 
                             எவருக்கும் !


                             பிறப்பும் இறப்பும் 
                             எவரும்மரியாமலே ...
                             எவ்வித பிழையும் மின்றி 
                             சரியாகவே வகுத்திருக்கிறது 
                             இயற்கை !


      
                           ஆனாலும் நாம் ....


                            நிலையற்றதை 
                            நிலையன நினைத்தே 
                            நித்தமும் 
                            தொலைத்து விட்டோம் 
                            அமைதியை !
                                                                                            
                                                       
             
                      24/07/2011  சிங்கப்பூர் தமிழ் முரசு நாளிதழில் இடம் பெற்ற எனது ஆக்கம்

Sep 16, 2011

இந்திய அளவில் பிரபலமான நடிகர்கள் பட்டியலில் விஜய் முதலிடம்...
கவிதையின் முழக்கம் 

பாரதியார் விழாவை முன்னிட்டு நண்பரின் இரண்டரை வயது விஜயதர்ஷினியின் தமிழ்ரசம் 
-------------------------------------------------------------------------------------------------
முடிஞ்சா சிரிங்க ...

''அம்மா இரண்டாயிரத்து ஒன்றில் முதல்வரானதுக்கும் இரண்டாயிரத்து பதினொன்றில் முதல்வரானத்திற்கும் நிறைய மாற்றம் இருக்கு!''

 ''ஆமாம் ஆமாம் ......அப்ப திமுக தலைவர மட்டும்தான் உள்ள பிடிச்சு போட்டாங்க. இப்ப , தி மு க தலைவர தவிர மற்ற எல்லாரையும் பிடிச்சி போடுறாங்க ''....------------------------------------------------------------------------------------------------

"வந்தான் வென்றான்"
படத்தில் இடம்பெற்ற ஒரு பாடலின் வரிகள் இது
            

"சேற்றிலே நீ விழுந்தாலும்
தாமரை மாலைகள் மாட்டிடு
நேற்று நீ போர் இழந்தாலும்
நாளை உன் நாளெனக் காட்டிடு"

முழுப்பாடலையும்  lyrics engineer-ன் பக்கத்தில் பார்க்கவும்.

-------------------------------------------------------------------------------------------------

நீரிழிவு நோய் என்றும், சர்க்கரை வியாதி என்றும் அறியப்படும் டயபடீஸ்,இந்தியா சந்திக்கும் மிகப்பெரும் சுகாதார நெருக்கடி என்று BBC சொல்கிறது. மேலும் அறிந்து கொள்ள தலைப்பை அழுத்துங்கள் 

-------------------------------------------------------------------------------------------------------------------------
அப்புறம் தலைப்புக்கான செய்தி :-

இந்திய அளவில் பிரபலமான நடிகர்கள் பட்டியலில் விஜய் முதலிடமும் அஜித் இரண்டாமிடமும் பெற்றுள்ளனர் . உலக அளவில் விஜய் நான்காமிடமும் அஜீத் ஐய்ந்தாமிடமும் பெற்றுள்ளதாக whopopular என்ற இந்த வலைத்தளம் சொல்கிறது.மேலும் பிரபலமானவர்கள் பற்றி தெரிந்து கொள்ள இந்த பக்கத்திற்கு செல்லுங்கள் .


Sep 11, 2011

காதல்


பரத நாட்டியமாய் ....
பரவசப்படுத்தும் !
தெளிந்த நீரோடையாய் 
அமைதியில் ஆழ்த்தும் !

கொஞ்சும் தமிழாய் வந்து 
கவிதைகள் படிக்கும் !
குதூகல குழந்தையாய் மனம் 
மகிழ்ச்சியில் மிதக்கும் !

நேரம் கடப்பது 
நினைவுகளில் தப்பும் 
நினைவுகளும் சில நேரம் 
குழம்பியே கிடக்கும் !

பூட்ட நினைத்தால் 
எரிமலை வெடிக்கும் !
பொங்கி எழுந்து 
புயலாகவும் அடிக்கும் !

ஞானியை போல 
உறவையும் துறக்கும் !
உறக்கம் என்பதும் 
மறந்தே கிடக்கும் !

காதல் கைகோர்த்தால் 
கவலைகளை மறக்கும் !
காலம் பிரித்தால் 
உயிரையும் துறக்கும் !


25-12-2010 சிங்கப்பூர் தமிழ் முரசு நாளிதழில் இடம் பெற்ற எனது ஆக்கம்.

Sep 9, 2011

வையகமும் வசப்படும்                   

ஒட்டிய கன்னம் 
ஒல்லி தேகம் 
ஒட்டு துணி .....
மதிக்கும் படியாகயில்லை 
தேகம் !  
ஆனால் ,
உலகம் தலை வணங்குகிறது 
மகாத்மாவை !

வெள்ளையுடை 
வெளுத்த கூந்தல் 
சுருங்கிய தோல்
அழகில்லா மேனி ....
ஆனால் ,
மயங்கி நின்றது மானுடம் 
அன்னை தெரசாவின் 
அன்புக்கு !

முரட்டு தலை 
பிதுங்கிய விழி 
எடுப்பான பல் 
பயனற்ற செவி 
முரடனின் தோற்றம்
ஆனால் ,
உலகம் 
வியந்து நின்றது 
தாமஸ் எடிசனிடம் !

புரிகிறது ....
அன்பும் 
அறிவும் 
அகிம்சையும் 
இருந்தால்
இவ் வையமும் 
நம் வசம் !  

 2-01-2011 சிங்கப்பூர் தமிழ் முரசு நாளிதழில் இடம் பெற்ற எனது ஆக்கம்

Sep 7, 2011

முன்னேறலாம் என்றுதான் வெளிநாடு சென்றேன்... ஆனால் வாழ்க்கைக்கு முடியுரை தேடிக்கொண்டேன்


                                              சந்திப்பு  - உண்மை கதை  உலகில் இருக்கும் 87 நாட்டவர்கள் வெளிநாடுகள் சென்று பணிபுரிய ஆர்வம் காட்டுவதாக ஒரு புள்ளிவிவரம் தெரிவிக்கின்றது.ஒரு நாட்டினர் இன்னொரு நாட்டிற்கு சென்று பணிபுரிய கல்வி தகுதியைவிட உடல் ஆரோக்கியம் மிகமுக்கியம்!

 பணிக்காக வெளிநாடு  சென்று இறங்கிய மறு கனமே, மருத்துவ சோதனைக்கு உட்படுத்தப்படுவது வழக்கம். ஒவ்வொரு நாடுகளுமே தங்கள் நாட்டின் சுகாதார பாதுகாப்பை கருத்தில் கொண்டு , வெளிநாட்டு ஊழியர்களிடம்  HIV  ஆய்வு செய்ய தவறுவதில்லை. வந்திறங்கிய வெளிநாட்டு ஊழியருக்கு எந்தவிதமான தொற்று நோய்களும் இல்லையென்று மருத்துவ ஆய்வுகள் சொன்னால்தான் அவர்களுக்கு விசா வழங்கி வேலை கொடுப்பதை பல நாடுகள் நடைமுறை படுத்தி வருகின்றன .

           மருத்துவ சோதனையை கட்டாய படுத்தப்பட்ட நாடுகளில் பணிபுரிந்துவிட்டு மூன்று வருடம் கழித்து ஊர் திரும்பிய ஒருவருக்கு எய்ட்ஸ் நோய் இருந்தால் அதற்க்கு எந்தநாடு  பொறுப்பேற்று கொள்வது? என்ற கேள்வியை எழுப்பினார் தஞ்சை பகுதியை சேர்ந்த சமுக ஆர்வளர் ஒருவர். மேலும் அவரே தொடர்ந்து ..."தஞ்சை திருவாரூர் பகுதியில் சிகிச்சை பெற்று வரும் எய்ட்ஸ் நோயாளிகளில் சிலர் மலேசிய சென்று முறையான மருத்துவ சான்றுகளுடன் இரண்டு மூன்று வருடம்  பணிபுரிந்துவிட்டு ஊர் திரும்பியவர்களும் அடக்கம்" என்ற அதிர்ச்சி தகவலை சொல்லி நிறுத்தினார் அந்த சமுக ஆர்வளர்.

                     நீண்ட தேடுதளுக்குபின் மலேசியாவில் மூன்று வருடம் பணிபுரிந்துவிட்டு நோயுடன் ஊர் திரும்பிய அவரை சந்தித்தபோது  பெயர் ஊர் வேண்டாம் என்ற அவரின் வேண்டுகோளை ஏற்றுக்கொண்டபின் பேச தொடங்கினார்.  எனக்கு திருமணமாகி ஒரு குழந்தை பிறந்த பின்தான் மலேசியா சென்றேன்.ஏஜென்ட் கார் கம்பெனியில் வேலை என்றார்.எழுபதாயிரம் ஏஜென்ட் பணம் கட்டிவிட்டு சென்ற எனக்கு ஹோட்டலில்தான் வேலை கொடுத்தார்கள். அப்புறம் தோட்டவேலை என்று சொல்லி .... ஆள் அரவமற்ற காட்டில் கொண்டவிட்டுவிட்டார்கள். எனக்கு வானொலியை தவிர வேறு எந்த துணையுமில்லை.

             முதலாளி வாரம் ஒரு முறை சமையல் பொருள்கள் வாங்கி  கொடுத்துவிட்டு செல்வதோடு சரி....தோட்டத்தில் காய் அறுவடை நாளில் தான் திரும்ப வருவார். எந்தபிரச்சனையும் இல்லாமால் இரண்டு  வருடம் ஓடிவிட்டது. முதலாளியிடம் இருந்து மூவாயிரம் ரிங்கிட் மேல் பணம் பாக்கி வரவேண்டியிருந்தது.சம்பள பாக்கியை தாருங்கள் ஊருக்கு போகவேண்டும் என்று சொல்லும்போதெல்லாம் எதாவது ஆசை கூறி இருக்க வைத்துவிடுவார்.

             அந்தவேளையில்தான் இந்தோனேஷியா பெண்னின் அறிமுகம் கிடைத்தது. என் தனிமை,சபலம், மாதகணக்கில் என் அறையிலேயே  அவளை தங்க வைத்துவிட்டேன். ஒருசில மாதத்தில் கர்ப்பமாக இருப்பதாக சொல்லி மிரட்டி பணம் பிடுங்க தொடங்கினாள். என் தோட்ட முதலாளியின் கவனத்துக்கு சென்றது, அவரும் அந்தபெண்ணுக்கு நஷ்டயீடக நாலாயீரம் ரிங்கிட் கொடுத்து அனுப்பிவிட்டதாக சொல்லிவிட்டார். எனக்கு ரொம்ப வேதனையாகவும் மானகேடாகவும் போய்விட்டது . என் நிலையே சொல்லி பலரிடம் புலம்பினேன் ...என் சம்பள பணத்தை இல்லை என்று செய்ய இந்தோனேஷியப் பெண்ணுடன் என் முதலாளி சேர்ந்து நடத்திய சதி என்றார்கள்.  எனக்கு அதற்கு மேல் அங்கிருக்க பிடிக்க வில்லை. என் ஏஜெண்டைப்பார்த்து ஊர்திரும்பினேன்.
மலேசியாவிலேயே காய்ச்சலும் தொடங்கிவிட்டது . வீடு வந்ததும் பாயோடு பாயாய் படுத்துவிட்டேன். ஊர் பேய் அடித்துவிட்டது என்றார்கள் இது செய்வினை கோளாறுதான் என்று விதவிதமான கதைகள் சொன்னார்கள். இது எய்ட்ஸ் தான் என்று எனக்கு மலேசிய மருத்துவமனையிலேயே சொல்லிவிட்டார்கள். மனைவியிடம் மட்டும் சொன்னேன் அவள் குழந்தைகளுடன் விலகி இருக்கிறாள்.

            முன்னேறலாம் என்றுதான் வெளிநாடு சென்றேன்... ஆனால் வாழ்க்கைக்கு முடியுரை தேடிக்கொண்டேன்!  இது என்னை போன்றவர்களுக்கு ஒரு பாடமாக இருக்கட்டும் என்றவர்  "எனக்கு எய்ட்ஸ் இருப்பது என் மனைவியை தவிர ஊருக்கோ உறவுக்கோ தெரியாது.தஞ்சை மருத்துவமனையில் கொடுக்கும் மருந்து மற்றும் டாக்டர்கள் கொடுக்கும் நம்பிக்கையில் வாழ்ந்துக்கொண்டிருக்கேன். தயவு செய்து என்னைபற்றிய பெயர் விவரங்களை எழுதி என் குடும்பத்தை கொலை செய்துவிடாதீர்கள்" என்ற வேண்டுகோளுடன் முடித்துகொண்டார்.

                        இதுபற்றி மலேசிய தமிழ் நண்பர்களான ராஜன் , விவேக்பாலன் என்ற இருவரிடம் கேட்டபோது '' மலேசியாவில் ஒரு சில கம்போங்(கிராமம்) பகுதிகளில் இந்தோனேஷியப் பெண்கள் இருப்பது உண்மைதான். ஆனால் முதலாளிகளே சேர்ந்து சதி செய்கிறார்கள் என்பதை ஏற்றுக்கொள்ள முடியாது. சில இந்திய பங்களாதேஷ் ஊழியர்கள் அங்கே தன் குடும்பத்தை தவிக்கவிட்டுவிட்டு, இந்தோனேஷியப் பெண்களின் சகவாசத்தால் பதினைந்து இருபது வருடம் ஊர் திரும்பாமல் கிடப்பவர்களையும் பார்க்கமுடிகிறது. இதற்கு எந்த முதாலாளி செய்த சதி? தன் குடும்பத்தின் முன்னேற்றத்தை குறிக்கோளாய் கொண்டு உழைப்பவர்களை எந்த சதியும் வீழ்த்திவிடாது.'' என்கிறார்கள். அதுவும் உண்மைதானே...   
                   

Sep 4, 2011

தமிழகத்தில் சுற்றுலா துறை நசிந்து வர காரணம் என்ன?
      தமிழகத்தில் சுற்றுலா துறை நசிந்து வர காரணம் என்ன? என்று கேட்டால் பலர் .. சுற்றுலா ஸ்தலங்களில் சுற்றி வரும் புரோக்கர்களை கைகாட்டுகிறார்கள் . 

         சுற்றுலா பயணிகளை கவர்ந்திழுக்க ....அழகு சுத்தம் சுகாதாரம் மட்டும் போதாது , பாதுகாப்பும் மிக மிக அவசியம் .! தமிழகத்தில் உள்ள விமான நிலையம் முதல் புண்ணிய ஸ்தலங்கள் வரை இடை தரகர்களின் கையில் சிக்கி சிரழிந்து வருகிறது என்பதே உண்மை!

 இதோ சில சம்பவங்கள்:-

          அண்மையில் மலேசியாவில் இருக்கும் கிள்ளான் மணியியல் மாளிகை உரிமையாளர் கோ.பரமசிவம் தமிழநாட்டில் இருக்கும் பல புண்ணிய ஸ்தலங்களை தரிசித்து விட்டு நாடு திரும்பினார். இவர் சிறந்த பேச்சாளரும்கூட ... இவர் மலேசியா வானொலி நிகழ்ச்சி ஒன்றில் தமிழக அனுபவத்தை பற்றி பேசும் போது இந்த புரோக்கர்களின் தொல்லைகள் பற்றியும் வாய் திறக்க தவறவில்லை !

        வெளி நாட்டு சுற்றுலாவுக்கு ஏற்பாடு செய்து தரும் மலேசிய டூரிஸ்ட் நிறுவனம் ஒன்று தமிழக கோவில்களை தமது கிடுக்கி பிடியில் வைத்திருக்கும் புரோக்கர் மற்றும் நம் போலீஸாருக்கு பயந்தே தமிழக சுற்றுலாவிற்கு ஏற்பாடு செய்ய தயங்குகின்றதாம் .

           தமிழக ஆன்மிக ஸ்தலமான பழனி பஸ் நிலையத்தில் இறந்கியதுமே ஏதாவது ஒரு ரூபத்தில் ஏமாற்றி பணம் பிடுங்க முயற்சிக்கிறார்கள் .  மலை அடிவாரத்தில் சுற்றுலா பயணிகளை மொய்க்கும் இந்த புரோக்கர்கள், ஏதாவதோர்கடைகளில் இழுத்து கொண்டு போய் நிறுத்தி, ஒரு அர்ச்சனைக்கு மாலை தேங்காய் பழம் விபுதி ஒரு மூங்கில் கூடையில் போட்டு ஆயிரம் இரண்டாயிரம் என அதிரடியாக பணம் பிடுங்குகிறார்கள் .

        மலை உச்சியில் இன்னும் மோசம், அர்ச்சனை செய்து தருவதாக சொல்லிக்கொண்டே ....கையில் இருக்கும் அர்ச்சனை பொருள்களை பிடிங்கி இருநூறு முன்னூறு என்று கேட்கிறார்கள். பழனியில் முடி கயறு டாலர் விற்கும் சிறுவர் சிறுமிகள் கூட பயணிகளிடம் ஏதாவது சொல்லி ஏமாற்றி பிடுங்குகிறார்கள் .

          இது ஒரு எடுத்துக்காட்டுதான். இதேப்போல் பல சுற்றுலா ஸ்தலங்களில் நடக்கும் அவலங்களை சொல்லி கொண்டேபோகலாம் .வெளிநாட்டு சுற்றுலா பயணிகளிடம் நம் விமான நிலைய ஊழியர்கள் எப்படி நடந்து கொள்கிறார்கள்? இதோ ஒரு சம்பவம் அவர்கள் சொல்படியே தருகிறேன்:- 

        "எங்களுக்கு பூர்விகமே சிங்கப்பூர்தான்" எனது மனைவி சென்னை வசமான சிங்கப்பூர் அலுவலகத்தில் மூன்று வருடம் வேலைப்பார்த்தவர். நான் மனைவி மற்றும் என் மகள் மூவரும் சீரடி சாய் பாப கோவிலுக்கு சென்றுவிட்டு தமிழ் நாட்டில் உள்ள சில கோவில்களையும் பார்த்துவிட்டு நண்பர் வீட்டில் ஒருநாள் தங்கிவிட்டு கடந்த ஆகஸ்ட் 20 ம் தேதி இரவு ஒன்பது மணிக்கு திருச்சி விமான நிலையத்திற்குள் நுழைந்தோம்.

      எங்களிடம் மொத்தமாக 60 கிலோவுக்கும் குறைவான லக்கேஜ் இருந்த்தது. விமான நிலைய வாயிலில் ஒருவர் எங்களை மறித்து..."டிராலியை நான் தள்ளிக்கொண்டு வருகிறேன் கொஞ்சம் காசு கொடுங்கள்" என்று கேட்டார் . நாங்கள் மூன்று பேர் இருக்கோம் வேண்டாம் என்று மறுத்துவிட்டோம். இருந்தாலும் அவர் எங்களை விட்டு விலகி செல்வதாக தெரியவில்லை.

             போர்டிங் போடும் போது எங்கள் மூன்று பாஸ்போர்டையும் ஒன்றாக வாங்கிய air india போர்டிங் ஆபீசரிடம், எங்களை தொடந்து வந்தவர் எதோ சொல்ல, அடுத்த கணமே சீற்றமான போர்டிங் ஆபிசர் "மூன்று பேருக்கு ஒண்ணா போர்டிங் போட முடியாது, தனி தனியாக வாங்க'' என்று எரிந்து விழுந்தார்

லக்கேஜ் பேக் ஒன்றில் இருபத்தி இரண்டு கிலோ மற்ற இரு பேக்கிலும் இருபது கிலோவிற்கும் குறைவாக இருந்தது. லக்கேஜ்ய் இருபது இருபது கிலோவாக பிரித்து வைக்க கூட விமான நிலைய ஊழியர்கள் அனுமதிக்கவில்லை . வெளியில் எடுத்துவந்து லக்கேஜை சரி செய்துகொண்டிருந்தோம் . எங்களை தொடர்ந்து வந்த அந்த நபர் நெய்எல்லாம் கொண்டு செல்லகூடாது வெளியில் எடுங்கள் என்றார், திரவ பொருள்களை கை லக்கேஜில் தானே கொண்டுபோககூடாது ... நெய்யை லக்கேஜில்தான் வைத்திருக்கோம் என்றோம். எங்கள் பேச்சு அங்கே எடுபடவில்லை. கடைசியில் நெய்யை வெளியில் நின்ற நண்பரிடம் கொடுத்து ஒருவழியாய் விமானத்துக்குள் திரும்பியபோது எங்கள் இருக்கைகைகள் அங்கொன்றும் இங்கொன்றும் ஒதுக்கப்பட்டிருந்தது . 

     இவ்வளவு கிழ்த்தரமாய் நடந்துகொள்ளும் விமான நிலைய ஊழியர்களை எங்கள் அனுபவத்தில் வேறு எங்கும் பார்த்ததில்லை. என்றார் வெறுப்புடன்