Followers

Oct 15, 2011

குட்டி இந்தியா (சிங்கப்பூர் தே...க்கா)


தேசம் விட்டு
தேசம் வந்து பொருள்தேடும் எனது
தேச நண்பர்களின் சொர்க்கபூமி!

தேகமும் மனமும்
ரணமாகிபோனதை
நண்பர்களின் நேச தழுவலில்
மறந்திட செய்யும்
மகத்தான இடம்!

தமிழக கிராமங்கள்
தொலைத்த தாவணி...
எங்கும் அரிதாகிப்போன
மூங்கில் குழாய் புட்டு...
விடுதியில் கண்ட
கோபால் பல் பொடி...
வீக்கத்தை தணிக்கும்
தென்னமரகுடி எண்ணையும்
தாராளமாய் கிடைக்கும்
தமிழக சந்தை!

மகிழ்ச்சி துக்கம்
விரோதம் விசாரிப்பு
கொடுக்கல் வாங்கல்
குதூகலம் குடும்பசண்டை
ஊழியர்கள் மத்தியில்
ஞாயிறு தோறும்
கதம்பமாய் கொட்டிக்கிடக்கும்
அதிசய நந்தவனம்!

6 comments:

Unknown said...

நல்ல அழகான கவிதை

SURYAJEEVA said...

அருமை, இக்கரைக்கு அக்கறை பச்சை என்று சென்றதால் அக்கறை பச்சை இனிப்பாய் உங்கள் வார்த்தைகளில் இருந்தாலும் இக்கரை பச்சையை நினைத்து ஏங்குவது பதிவு செய்யப் பட்டது அருமை

அம்பலத்தார் said...

சிங்கப்பூர் வாழ் நம்மவர் வாழ்வை கவிதைக்குள் அழகாக சிறைப்பிடித்துவிட்டீர்கள்.

எம்.எஸ்.ரஜினி பிரதாப் சிங் said...

தொலைத்த தாவணி...தாவணி யின் அழகை உணராதவர்கள் அரைவேக்காடுகள், நல்ல கவிதை

ஒதிகை நிழல் said...

@வைரைசதிஷ்,suryajeeva,அம்பலத்தார்,எம்.எஸ்.ரஜினி பிரதாப் சிங்

வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி நண்பர்களே...

Muthuselvam said...

இது தான் சிங்கப்பூர் வாழ்க்கையா
நித்தமும் நித்திரை தொலைத்து
நிரந்தரம் மின்மை தான் சிங்கபுரா ?
எல்லாவற்றிக்கும் இறுமுகம் உண்டு
இது ஒரு முகம் ,
மறு முகம் உங்களுக்கு தெரியுமா ?

Post a Comment