Followers

Sep 4, 2011

தமிழகத்தில் சுற்றுலா துறை நசிந்து வர காரணம் என்ன?
      தமிழகத்தில் சுற்றுலா துறை நசிந்து வர காரணம் என்ன? என்று கேட்டால் பலர் .. சுற்றுலா ஸ்தலங்களில் சுற்றி வரும் புரோக்கர்களை கைகாட்டுகிறார்கள் . 

         சுற்றுலா பயணிகளை கவர்ந்திழுக்க ....அழகு சுத்தம் சுகாதாரம் மட்டும் போதாது , பாதுகாப்பும் மிக மிக அவசியம் .! தமிழகத்தில் உள்ள விமான நிலையம் முதல் புண்ணிய ஸ்தலங்கள் வரை இடை தரகர்களின் கையில் சிக்கி சிரழிந்து வருகிறது என்பதே உண்மை!

 இதோ சில சம்பவங்கள்:-

          அண்மையில் மலேசியாவில் இருக்கும் கிள்ளான் மணியியல் மாளிகை உரிமையாளர் கோ.பரமசிவம் தமிழநாட்டில் இருக்கும் பல புண்ணிய ஸ்தலங்களை தரிசித்து விட்டு நாடு திரும்பினார். இவர் சிறந்த பேச்சாளரும்கூட ... இவர் மலேசியா வானொலி நிகழ்ச்சி ஒன்றில் தமிழக அனுபவத்தை பற்றி பேசும் போது இந்த புரோக்கர்களின் தொல்லைகள் பற்றியும் வாய் திறக்க தவறவில்லை !

        வெளி நாட்டு சுற்றுலாவுக்கு ஏற்பாடு செய்து தரும் மலேசிய டூரிஸ்ட் நிறுவனம் ஒன்று தமிழக கோவில்களை தமது கிடுக்கி பிடியில் வைத்திருக்கும் புரோக்கர் மற்றும் நம் போலீஸாருக்கு பயந்தே தமிழக சுற்றுலாவிற்கு ஏற்பாடு செய்ய தயங்குகின்றதாம் .

           தமிழக ஆன்மிக ஸ்தலமான பழனி பஸ் நிலையத்தில் இறந்கியதுமே ஏதாவது ஒரு ரூபத்தில் ஏமாற்றி பணம் பிடுங்க முயற்சிக்கிறார்கள் .  மலை அடிவாரத்தில் சுற்றுலா பயணிகளை மொய்க்கும் இந்த புரோக்கர்கள், ஏதாவதோர்கடைகளில் இழுத்து கொண்டு போய் நிறுத்தி, ஒரு அர்ச்சனைக்கு மாலை தேங்காய் பழம் விபுதி ஒரு மூங்கில் கூடையில் போட்டு ஆயிரம் இரண்டாயிரம் என அதிரடியாக பணம் பிடுங்குகிறார்கள் .

        மலை உச்சியில் இன்னும் மோசம், அர்ச்சனை செய்து தருவதாக சொல்லிக்கொண்டே ....கையில் இருக்கும் அர்ச்சனை பொருள்களை பிடிங்கி இருநூறு முன்னூறு என்று கேட்கிறார்கள். பழனியில் முடி கயறு டாலர் விற்கும் சிறுவர் சிறுமிகள் கூட பயணிகளிடம் ஏதாவது சொல்லி ஏமாற்றி பிடுங்குகிறார்கள் .

          இது ஒரு எடுத்துக்காட்டுதான். இதேப்போல் பல சுற்றுலா ஸ்தலங்களில் நடக்கும் அவலங்களை சொல்லி கொண்டேபோகலாம் .வெளிநாட்டு சுற்றுலா பயணிகளிடம் நம் விமான நிலைய ஊழியர்கள் எப்படி நடந்து கொள்கிறார்கள்? இதோ ஒரு சம்பவம் அவர்கள் சொல்படியே தருகிறேன்:- 

        "எங்களுக்கு பூர்விகமே சிங்கப்பூர்தான்" எனது மனைவி சென்னை வசமான சிங்கப்பூர் அலுவலகத்தில் மூன்று வருடம் வேலைப்பார்த்தவர். நான் மனைவி மற்றும் என் மகள் மூவரும் சீரடி சாய் பாப கோவிலுக்கு சென்றுவிட்டு தமிழ் நாட்டில் உள்ள சில கோவில்களையும் பார்த்துவிட்டு நண்பர் வீட்டில் ஒருநாள் தங்கிவிட்டு கடந்த ஆகஸ்ட் 20 ம் தேதி இரவு ஒன்பது மணிக்கு திருச்சி விமான நிலையத்திற்குள் நுழைந்தோம்.

      எங்களிடம் மொத்தமாக 60 கிலோவுக்கும் குறைவான லக்கேஜ் இருந்த்தது. விமான நிலைய வாயிலில் ஒருவர் எங்களை மறித்து..."டிராலியை நான் தள்ளிக்கொண்டு வருகிறேன் கொஞ்சம் காசு கொடுங்கள்" என்று கேட்டார் . நாங்கள் மூன்று பேர் இருக்கோம் வேண்டாம் என்று மறுத்துவிட்டோம். இருந்தாலும் அவர் எங்களை விட்டு விலகி செல்வதாக தெரியவில்லை.

             போர்டிங் போடும் போது எங்கள் மூன்று பாஸ்போர்டையும் ஒன்றாக வாங்கிய air india போர்டிங் ஆபீசரிடம், எங்களை தொடந்து வந்தவர் எதோ சொல்ல, அடுத்த கணமே சீற்றமான போர்டிங் ஆபிசர் "மூன்று பேருக்கு ஒண்ணா போர்டிங் போட முடியாது, தனி தனியாக வாங்க'' என்று எரிந்து விழுந்தார்

லக்கேஜ் பேக் ஒன்றில் இருபத்தி இரண்டு கிலோ மற்ற இரு பேக்கிலும் இருபது கிலோவிற்கும் குறைவாக இருந்தது. லக்கேஜ்ய் இருபது இருபது கிலோவாக பிரித்து வைக்க கூட விமான நிலைய ஊழியர்கள் அனுமதிக்கவில்லை . வெளியில் எடுத்துவந்து லக்கேஜை சரி செய்துகொண்டிருந்தோம் . எங்களை தொடர்ந்து வந்த அந்த நபர் நெய்எல்லாம் கொண்டு செல்லகூடாது வெளியில் எடுங்கள் என்றார், திரவ பொருள்களை கை லக்கேஜில் தானே கொண்டுபோககூடாது ... நெய்யை லக்கேஜில்தான் வைத்திருக்கோம் என்றோம். எங்கள் பேச்சு அங்கே எடுபடவில்லை. கடைசியில் நெய்யை வெளியில் நின்ற நண்பரிடம் கொடுத்து ஒருவழியாய் விமானத்துக்குள் திரும்பியபோது எங்கள் இருக்கைகைகள் அங்கொன்றும் இங்கொன்றும் ஒதுக்கப்பட்டிருந்தது . 

     இவ்வளவு கிழ்த்தரமாய் நடந்துகொள்ளும் விமான நிலைய ஊழியர்களை எங்கள் அனுபவத்தில் வேறு எங்கும் பார்த்ததில்லை. என்றார் வெறுப்புடன்

3 comments:

நாடோடிப் பையன் said...

Sorry to hear such a bad experience.

Enfielder said...

உங்களுக்கு ஏற்பட்ட மன உளைச்சலையும் சம்மந்தப்பட்ட அதிகாரி பெயரையும் புகாராக கீழ்கண்ட முகவரியில் பதியவும் ...

http://home.airindia.in/SBCMS/Webpages/ContactUs.aspx?mid=287

ஒதிகை மு.க.அழகிரிவேல் said...

வருகைக்கும் ஆலோசனைக்கும் நன்றி @நாடோடிப் பையன்&Enfielder

Post a Comment