Followers

Sep 22, 2011

நிலையன நினைத்தே!


                                   படதுக்கும் கவிதைக்கும் சம்பந்தமில்லைங்க



                           ருவில் 
                            உயிர் பெற்றதும் 
                            உறுதியாகிவிட்டது 
                            மரணமும் !


                            முதிர்ந்தோ ...
                            முதிராமலோ ,
                            முடிந்து போய்விடும் 
                             வாழ்க்கை !


                             நாம் 
                             விரும்பினாலும் 
                             விரும்பாவிடிலும் 
                             விட்டு வைக்கப்போவதில்லை 
                             முதுமை !


                             உயிரும் நட்பும் 
                             எப்படி பிரியும் 
                             எப்போது பிரியும் 
                             எழுதி வைத்திட முடியவில்லை 
                             எவருக்கும் !


                             பிறப்பும் இறப்பும் 
                             எவரும்மரியாமலே ...
                             எவ்வித பிழையும் மின்றி 
                             சரியாகவே வகுத்திருக்கிறது 
                             இயற்கை !


      
                           ஆனாலும் நாம் ....


                            நிலையற்றதை 
                            நிலையன நினைத்தே 
                            நித்தமும் 
                            தொலைத்து விட்டோம் 
                            அமைதியை !
                                                                                            
                                                       
             
                      24/07/2011  சிங்கப்பூர் தமிழ் முரசு நாளிதழில் இடம் பெற்ற எனது ஆக்கம்

22 comments:

SURYAJEEVA said...

சம்பந்தமில்லையா? நிஜமாகவேவா ?

ADMIN said...

ரொம்ப நல்லா இருக்கு. மனசுக்கு பிடிச்ச மாதிரி ..வாழ்த்துக்கள்..!

ADMIN said...

நேரமிருக்கும் போது இங்கேயும் வந்துட்டுப் போங்க்..!தங்கம்பழனி

ADMIN said...

தளத்தையும் பின்தொடர்ந்திருக்கிறேன்.

மகேந்திரன் said...

அழகுக் கவிதை

ஒதிகை மு.க.அழகிரிவேல் said...

suryajeeva said...
சம்பந்தமில்லையா? நிஜமாகவேவா ?

அட நெசம்தாங்க..
வருகைக்கு நன்றி சூர்யா

ஒதிகை மு.க.அழகிரிவேல் said...

தங்கம்பழனி said...
ரொம்ப நல்லா இருக்கு. மனசுக்கு பிடிச்ச மாதிரி ..வாழ்த்துக்கள்..!

வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி தங்கம்...

ஒதிகை மு.க.அழகிரிவேல் said...

மகேந்திரன் said...
அழகுக் கவிதை

நன்றி அழகு மகேந்திரன்

பட்டுக்கோட்டை கலியாணசுந்தரம் said...

ஒண்ணுமே புரியல்லே உலகத்திலே
கண்ணிலே கண்டதும் கனவாய்த் தோணுது
காதிலே கேட்டதும் கதை போல் ஆனது
கண்ணிலே கண்டதும் கனவாய்த் தோணுது
காதிலே கேட்டதும் கதை போல் ஆனது

ஜெயசீலன் said...

மிக அருமை. இந்த கவிதை படிக்கும்போது பட்டினத்தார் பாடிய பாடல் ஞாபகம் வருகிறது.

கவிதை வீதி... // சௌந்தர் // said...

அசத்தலான கவிதை...

கவிதை வீதி... // சௌந்தர் // said...

நான் ஒத்துக்கொள்கிறேன் படத்துக்கும் கவிதைக்கும் சம்பந்தமில்லை

Unknown said...

ஒவ்வொன்றும் அழகான வரிகள்

பெமி said...

அருமை

இராஜராஜேஸ்வரி said...

நிலையற்றதை
நிலையன நினைத்தே
நித்தமும்
தொலைத்து விட்டோம்
அமைதியை !/

நிலையாமைத் தத்துவத்தை
நிதர்சனமாய் நிறுத்திய கவிதைக்குப் பாராட்டுக்கள்.

ஒதிகை மு.க.அழகிரிவேல் said...

# கவிதை வீதி # சௌந்தர் said...
அசத்தலான கவிதை...
September 24, 2011 2:49 AM



நன்றி கவிதை வீதி

ஒதிகை மு.க.அழகிரிவேல் said...

வைரை சதிஷ் said...
ஒவ்வொன்றும் அழகான வரிகள்
September 24, 2011 9:01 AM


நன்றி சதீஷ்

ஒதிகை மு.க.அழகிரிவேல் said...

இராஜராஜேஸ்வரி said...
நிலையாமைத் தத்துவத்தை
நிதர்சனமாய் நிறுத்திய கவிதைக்குப் பாராட்டுக்கள்.


வருகைக்கு நன்றி இராஜேஸ்வரி

ஒதிகை மு.க.அழகிரிவேல் said...

நன்றி ஜெயசீலன் மற்றும் பெமி

Muthuselvam said...

உயிரும் நட்பும்
எப்படி பிரியும்
எப்போது பிரியும்
எழுதி வைத்திட முடியவில்லை
எவருக்கும் !

இந்த வ்றிகள் சேர்த்தமையால்
கவிதை நன்று .

அம்பலத்தார் said...

வாவ் super

arul said...

unmayai uraikkum kavithai

Post a Comment